தென்னகம் என உரிமை கொண்டாட கும்முடிப்பூண்டிக்கு வடக்கேயும், கோயம்புத்தூரை தாண்டியும் கால்வைக்காத திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது? தென்னகத்தை குறிப்பிட்டுப்பேச திமுகவுக்கு அதிகாரம் இல்லை! எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
மகாபாரத இதிகாசத்தில் சிசுபாலன் என்பவன் ஸ்ரீ கிருஷ்ணரை மிக மிக மோசமாக கேவலமாக விமர்சிப்பான். சிசுபாலனின் தாயாரான தனது அத்தையிடம், ”தாங்கள் கேட்டுக்கொள்வதால், சிசுபாலன் நூறு முறைகள் என்னை கேவலமாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்கிறேன்” என உறுதியளித்திருப்பார்! அதன்படி அவனது கீழ்தரமான பேச்சுக்களை நூறு முறை பொறுத்துக்கொண்டபின்பு கிருஷ்னர் சக்கராயுதத்தை ஏவி அவன் தலையை துண்டித்து விடுவார்!
சிசுபாலன் கிருஷ்ணரை வசைபாடியதைப்போல திக திமுகவினர் ஹிந்து மத்தத்தினரை இழிவாக பேசிவருகின்றனர்! ஹிந்துமதத்தில் மட்டும்தான் ஜாதி இருக்கிறது, ஹிந்துமதத்தில்தான் ஜாதி வேறுபாடு இருக்கிறது, ஹிந்துமதத்தில் பகுத்தறிவு இல்லை, கல்லையும் மண்ணையும் கும்பிடுவது கேவலமானது, ஹிந்துக்கள் மூட நம்பிக்கை உடையவர்கள், ஹிந்துக்கள் தாழ்வானவர்கள், ஹிந்துக்கள் வேசி மகன்கள், ஹிந்து பெண்கள் அனைவருமே கற்பு இல்லாதவர்கள், ஹிந்து திருமண சடங்குகள் கேவலமானவை, இந்து என்றால் திருடன், ராமன் என்ன படித்தான்? ராமன் இஞ்சினியரா?, பிள்ளையார் சிலைக்கு ஈவேரா செருப்படி கொடுத்தது மிக மிக சரியானது, செருப்படி கொடுத்தபின்புதான் முட்டாள் ஹிந்துக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினார்கள், ஹிந்துமத பண்டிகைகளுக்கு அரசு சார்பில் கூட வாழ்த்து சொல்லமாட்டோம், ஆனால் மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லி ஹிந்துக்களை இழிவு செய்வோம், ஹிந்துக்களின் சனாதன தர்மத்தை நாங்கள் அழிப்போம், என்றெல்லாம் ஆயிரக்கணக்கான கிழிச்சொற்களை ஹிந்துமதத்தினரை நோக்கி திமுகவும் திகவும் தினந்தோறும் பேசிவருகிறது!
இந்த வரிசையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் என்பவர் ஆன்றோர்கள் கூடி இருக்கும் நாடாளுமன்ற அவையில், பாரதிய ஜனதா கட்சி கோமோத்திர மாநிலங்களான வடக்கு மாநிலங்களில் வெற்றி பெறலாம், ஆனால், தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாது! என்று பேசினார்! கோமோத்திர மாநிலம் என இழிவான பொருள்படும்படி அவர் பேசினார்!
நாடாளுமன்றத்தில் செந்தில்குமார் இதை பேச வேண்டிய அவசியமே இல்லை! அம்மாதிரியான விமர்சனம் தேவைப்படும் அளவிலான விவாதம் அங்கு நடைபெறவும் இல்லை! மகாபாரத இதிகாசத்தில் சிசுபாலன் பேசியதுபோல் தேவையில்லாத இடத்தில், நாட்டின் மாபெரும் அவையில் இப்படி பேசினார் அவர்!
ஹிந்து என்றால் வேசிமகன் என்பதுதான் பொருள்! நீ ஹிந்துவாக இருக்கும்வரை வேசிமகன்தான். எனவே ஹிந்து என்னும் அடையாளத்தை விட்டுவிடு! என்றெல்லாம் கூட ஆ.ராஜா என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாக செய்திகள் உள்ளது!
ஆ.ராஜா பேசியதாக செய்தி வந்திருப்பது நாடாளுமன்றத்தில் அல்ல, பொதுக்கூட்டத்தில். ஆனால் இந்த செந்தில் பாலாஜி நாடாளுமன்றத்தில் பிரதமரும் அமைச்சர்களும் சபாநாயகரும் பங்கேற்கும் அவையில், ”பாஜக கோமோத்திர மாநிலங்களில்தான் வெற்றிபெற முடியும்”- என இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசியுள்ளார்!
இத்தகைய பேச்சுக்களும் சிந்தனையும் இந்த திக திமுகவினருக்கு எப்படி வந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்! “எப்படியாவது பேசி, ஹிந்துக்களை அவமானப்படுத்தி, பின்னர் மதம் மாற்ற வேண்டும்” என்பது அன்னிய மதமாற்ற சக்திகளின் நோக்கமாகும்! ஹிந்துக்களை கேவலப்படுத்தினால் அது மதமாற்றத்திற்கு உதவும் என்பது மதமாற்ற சக்திகளின் கருத்தாகும்!
எனவே அன்னிய சக்திகளின் கூலிப்படையாக திக, திமுக கும்பல் செயல்படுகிறது என ஒரு குற்றச்சாட்டு உள்ளது! உள்ளூர் மேடைகளில் வீசிவந்த அசிங்கத்தை நாடாளுமன்றத்திலும் வீசத்துவங்கினார் தருமபுரி எம்.பி. செந்தில் குமார்! ஹிந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவர்களும்கூட சினம்கொண்டு எழுந்து, இவரது எம்.பி.பதவியையே பறிக்கும் நிலை வந்ததும் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து தப்பித்து விட்டார் செந்தில்குமார்!
”கோ”மாநிலம் என்பதைத்தான் கோமோத்திர மாநிலம் என இழிவாக குறிப்பிட்டார் அவர்! தமிழகமும் கோ மாநிலம்தானே! ”கோமாதா எங்கள் குலமாதா” என்னும் திரைப்பட பாடல் தமிழகத்தில் சந்துகள் தோறும் ஒலித்துக்கொண்டிருக்கிறதே!
தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் அதிகாலையில் நடக்கும் முதல் பூஜை கோபூஜைதானே! தமிழகத்தில் புதுமனை புகு விழாக்களின்போது இவர் சொன்ன கோமோத்திரம் புதுவீட்டில் பெய்தால்தான் செல்வம் செழிக்கும் என்னும் நம்பிக்கை உள்ளதே! புதுவீட்டில் முதல் வருகையாக பசு வரவேண்டும்! அது சாணத்தையும் கோமியத்தையும் வீட்டின் உள்ளே பொழிய வேண்டும்! இதுதான் தமிழக மக்களின் வேண்டுதல்! செந்தில் குமாரின் பார்வையில் பதில் சொல்வதானால், தமிழகமும் கோமோத்திர மாநிலம்தான்!
அதுவென்ன தென்னகத்தில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது! 2020 ல் திமுகவுக்கு தமிழகத்தில் என்ன நிலையோ அதே நிலைதானே இப்போது பாஜகவுக்கு கர்நாடகத்தில்! கர்நாடக தென்னகத்தில் பாஜக ஆண்ட கட்சியல்லவா? பாண்டிச்சேரி தென்னகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிதானே நடக்கிறது! தெலுங்கானாவில் ”இன்று ஒன்பதாக” தேர்தலில் வளர்ச்சி கண்டுள்ளதே பாஜக! தமிழகத்திலும் 4 எம்.எல்.எ கள்! தமிழகத்தில் வளரும் கட்சி பாஜகதானே!
தென்னகம் என உரிமை கொண்டாட கும்முடிப்பூண்டிக்கு வடக்கேயும், கோயம்புத்தூரை தாண்டியும் கால்வைக்காத திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது? தென்னகத்தை குறிப்பிட்டுப்பேச திமுகவுக்கு அதிகாரம் இல்லை!
திமுகசிசுபாலனிம் தவறுகள் நூறு என்னும் எண்ணிக்கையை தாண்டிவிட்டது! இனி தாமரை என்னும் சக்கராயுதத்திற்குதான் வேலை இருக்கிறது! எனத் தெரிவித்துள்ளார்.