பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வானதி சீனிவாசன் தமது X பதிவில், அறம் இல்லா அறநிலையத்துறை அதிகாரிகள். பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் ஐயப்ப பக்தர்கள், மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கின்றது. கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க தான் அறநிலையத்துறை. அவர்களை காயப்படுத்துவதற்கு அல்ல.
இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை, சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்து மதத்தின் மீது சேற்றை வாரி இறைப்பது என இந்து மதத்திற்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்க தொடங்கியுள்ளது.
இந்து சமயத்தின் நம்பிக்கையை காக்க இந்து கோயில்களில் இருந்து தமிழக அரசு வெளியேற வேண்டும்”ஐயப்ப பக்தர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.