தென் கொரியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் தென் கொரியாவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இது திங்கட்கிழமை குன்சன் விமானத்தளம் அருகே விபத்துக்குள்ளானது. விமானத்தில் அவசரநிலை வழியாக விமானி வெளியேறினார். அவரை தென் கொரிய கடலோர காவல்படை அதிகாரிகள் மீட்டனர்.
விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானி குணமடைந்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க பிரிவு கமாண்டர், கர்னல் மேத்யூ கெட்கே தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் உள்ள அமெரிக்க இராணுவம் அந்நாட்டில் இரண்டு விமான தளங்களை இயக்குகிறது.