பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி சிலைக்கு ரசிகர் ஒருவர் சிறப்பு அபிஷேகம் செய்தார்.
தமிழ் திரையுலகில் ரசிர்களின் இளம் நெஞ்சங்களைக் கொள்ளையடித்த நடிகை குஷ்பு, நயன்தாரா, சமந்தா ஆகியோருக்கு கோவில் கட்டி சிலை வைத்து ரசிகர்கள் தங்கள் அன்பைச் செலுத்தி வருகின்றனர்.
அதேபோல, தமிழ் திரையுலகிலும் சரி, உலக அளவிலும் சரி, அதிக ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகர் என்ற பெருமை ரஜினி-க்கு மட்டுமே உண்டு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. முன்னாள் துணை இராணுவப் படை வீரர். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் மதுரையில் அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில்’ என்ற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோவில் கட்டியுள்ளார்.
சுமார் 250 கிலோ கருங்கல்லில் ரஜினிக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தி வருகிறார். இந்த கோவிலில் தினசரி காலை, மாலை என 2 கால பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரஜினியின் 73-வது பிறந்த நாளையொட்டி, ரஜினியின் சிலைக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ரஜினியின் சிலை மலர்களால் அலங்கரிப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மற்றும் சுற்றுப்புரத்தைச் சேர்ந்த ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.