50 ஓவர்கள் கொண்ட U-19 ஆசியக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19 வயத்துக்குட்பட்டோர்கான 10வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இன்றைய நாளில் மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதன் இரண்டாம் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
முதல் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஷாமில் ஹுசைன் மற்றும் ஷாஜாய்ப் கான் களமிறங்கினர். இவர்கள் இருவரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியான ஆட்டத்தை ஆட தொடங்கினர்.
இருவரும் சிக்சர்கள், பௌண்டரியஸாக அடித்து நொறுக்க முதல் விக்கெட்டிற்கே 17 வது ஓவர் வரை சென்றது. இதில் ஷாமில் ஹுசைன் 75 ரன்களும், ஷாஜாய்ப் கான் 79 ரன்களும் அடித்தனர்.
பின்பு களமிறங்கிய ரியாஸ் உல்லா தன் பங்கிற்கு 73 ரன்களை அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஓர் இலக்கில் ஆட்டமிழக்க அசான் அவாய்ஸ் மட்டும் 20 ரன்களை எடுத்தார்.
இறுதியாக 48 வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 303 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பஷீர் அகமது மற்றும் ஃபரிடூன் தாவூத்சாய் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். கலீல் அகமது மற்றும் நசீர் கான் மரூப்கில் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக காலித் தனிவால் மற்றும் வஃபியுல்லா தாரகில் ஆகியோர் களமிறங்கினர். காலித் தனிவால் 5 ரன்களில் ஆட்டமிழக்க வஃபியுல்லா தாரகில் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக நுமன் ஷா 54 ரன்களையும் ஃபரிடூன் தாவூத்சாய் 32 ரன்களை எடுத்தனர்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 49 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 220 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.