சமீபகாலமாக டேடிங் செயலின் பயன்பாடு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு, டிண்டர் (Tinder), பம்பிள் (Bumble,) ஓகேகியூபிட் (OKCupid) Grindr என ஏராளமாக செயலிகள் உள்ளது.
இந்த நிலையில், பழமைவாத மதபழக்க வழக்களை கொண்டுள்ள முஸ்லீம் நாடான பாகிஸ்தானிலும் டேட்டிங் சமாச்சாரம் சக்கைபோடு போடுகிறது.
மற்ற நாடுகளைப் போலவே, இந்த நாட்டிலும் டேட்டிங் செயலியின் சபல புத்திக்காரர்களை பாடாய்படுத்தி வருகிறது. குறிப்பாக, Muzz என்ற செயலி மிகவும் பிரபலம்.
2015 -ம் ஆண்டு ஷாஜாத் யூனாஸ் என்பவரால் நிறுவப்பட்ட நிறுவனமே இந்த Muzz செயலி.
இந்த நிலையில், Muzz என்ற அந்த டேட்டிங் செயலி வெளியிட்ட விளம்பரம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த விளம்பரமும், அதிலிருந்த வாசகமும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதன்படி, அந்த சிவப்பு நிற விளம்பர பலகையில், “Cousins to choro, Koi aur dhoondo” என்று எழுதப்பட்டு இருந்து.
அதாவது, “உறவினர்களை தேடுவதை நிறுத்துங்கள், புதியவர்களை தேடுங்கள், உடனே Muzz செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளது.
இந்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட ஒருவர், அதனை போட்டோ எடுத்து தனது x பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானியர் ஒருவர், இஸ்லாமியர் அல்லாத ஒருவரான, கிறிஸ்துவர், சீக்கியர் ரகசிய உறவு வைத்துக் கொள்ள அந்த டேட்டிங் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்கிறார்.
Muzz செயலியின் சர்ச்சை விளம்பரம் பாகிஸ்தானில் மட்டும்லாது பல்வேறு திசைகளிலும் ரெக்கை கட்டி பறந்து வருகிறது.