2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!
Mar 15, 2026, 08:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 மாநிலங்களில் 33% மகளிா் இடஒதுக்கீடு: மக்களவையில் நிறைவேற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 13, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் 2 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இம்மசோதை தோல்வியடைந்தது. இதன் பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றங்களில் அறிமுகப்படுத்தப்பட்டும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியது. அப்போது, இரு அவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா  நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் பின்னர், இம்மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவரது ஒப்புதலை பெற்ற பிறகு சட்டமாக்கப்பட்டது. எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்த பிறகே, இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய நித்யானந்த் ராய், “முகலாயர்கள் ஆட்சியிலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் நாட்டில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் முன்னேற வாய்ப்பளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு உரிய மரியாதையும், சரியான வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தங்களின் அறிவு மற்றும் திறமையால் பெண்கள் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர்” என்றாா். இதைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

Tags: ParliamentWoman reservationNityanad rai
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்! – சபாநாயகர் ஓம் பிர்லா

Next Post

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies