இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி உள்ளது.
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில், டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகியவை அமைந்துள்ளன. இங்குப் புதிதாக 3 மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தியாவின் மானிய உதவியுடன் இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில், மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 11-ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை, இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.