ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது என்பது கடினமான செயல் என்று சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் சயந்தன் கோசல் கூறியுள்ளார்.
கல்கத்தாவை சேர்ந்தவர் கவிஞர், சுதந்திர போராளி ரவீந்திரநாத் தாகூர். பல தசாப்தங்களாக ஒருவரின் பாடல் பாரதம் முழுவதும் பாடுபடுவது என்றால் அது இவர் இயற்றிய தேசிய கீதமே. இவரின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிலப் பகுதிகளை எடுத்து பலரும் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் சயந்தன் கோசலின் ‘ ரவீந்திர கப்யா ரஹஸ்யா ‘ என்ற ஒரு புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரவீந்திரநாத் தாகூரின் கதாபாத்திரம் ஒரு முக்கிய பாத்திரமாக உள்ளது.
ஆனால் இப்படத்தின் கதைக் களம் சற்றி மாறுபட்டு ரவீந்திரநாத் தாகூர் நிகழ்காலத்தில் உள்ள ஒரு மர்மத்தைத் தீர்க்க உதவுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் பனோரமா பிரிவின் கீழ் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்த வரவேற்பைக் குறித்து இப்படத்தின் இயக்குநர் சயந்தன் கோசல் கூறியிருப்பதாவது, ” இப்படத்தின் வரவேற்பைக் கண்டு மகிழ்ச்சி அளிக்கிறோம், திரைப்படவிழாவில் இப்படமானது காலை 10 மணிக்குத் திரையிடப்பட்டது, காலை வேளையில் படத்தைப் பார்க்க யார் வரப்போகிறார்கள் என்று பார்த்தோம். ஆனால் படம் தொடங்குவதற்கு முன்பே 80% இருக்கை நிரம்பியிருந்தது ” என்று கூறினார்.
மேலும் அவர், ” ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி படம் எடுப்பது என்பது கடினமான செயல். இப்படத்தைப் பார்த்தவர்கள் இதனைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர்.
இப்படத்தில் பல காட்சிகள் உண்மையைக் கூறியது, பல காட்சிகளைக் கற்பனையாக எடுத்திருந்தோம். இருப்பினும் இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது ” என்று கூறினார்.