காஞ்சிபுரம் அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவிலில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராமானுஜர் திருக்கோவிலுக்கு வருகை வந்தார். அவருக்கு, திருக்கோவில் சார்பில் மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், கோவில் யானை கோதைக்கு பேரிச்சம்பழம், ஆப்பிள் போன்றவற்றை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட கோவில் யானை கோதை, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆசி வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, ராமானுஜர் சன்னதி, ஆதிகேசவ பெருமாள், தாயார் சன்னதிகளில் சிறப்பு அர்ச்சனை, சிறப்பு பூஜை செய்தார். திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து கார் மூலம் ஆந்திரா புறப்பட்டுச் சென்றார்.