ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட இப்போது குறுகிய காலத்தில் வழங்கப்படும் விசாக்கள் மிகச் சிறந்தவை என்று பிலிப் அக்கர்மன் குறிப்பிட்டார்.
ஜெர்மன் விசா இந்திய குடிமக்கள் அனைவர்க்கும் மிகக் குறுகிய காலத்தில் வழங்க முடியும் என்று ஜெர்மனின் விசா சேவைகளைப் பற்றி ஜெர்மனியில் உள்ள இந்திய தூதர் பிலிப் அக்கர்மன் எடுத்துரைத்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட இப்போது குறுகிய கால இடைவெளியில் வழங்கப்படும் விசாக்கள் மிகச் சிறந்தவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் விசா சேவையை மேம்படுத்தியுள்ளோம். அடிப்படையாக இந்த விசா பெறுவதற்கான காத்திருப்பு நேரம் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும்.
ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட மிகக் குறுகிய காலத்தில் விசாக்களை வழங்க முடியும் என்பதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டு நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நான் நினைக்கிறேன். விசாவில் முன் இருந்த விஷயங்களை விட தற்போது மிகவும் சிறப்பாக உள்ளன என்பதை உங்களுக்குச் சொல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ” என்று கூறினார்.