சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில், மொத்தம் 1,135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மிக்ஜாங் புயல் காரணமாகசென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழையின் காரணமாக, நான்கு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் நிரம்பி வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் 26 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளன. மேலும், 2 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 462 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும், 68 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 442 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 59 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 205 ஏரிகள் நிரம்பி உள்ளன. மேலும், 104 ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில், மொத்தம் 1,135 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.