50 ஓவரிகள் முடிவில் அரியானா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 293 ரன்களை எடுத்ததுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 38 அணிகள் பங்கேற்றுள்ளது.
இந்நிலையில் மொத்தம் 135 போட்டிகள் கொண்ட இத்தொடரின் 133 வது போட்டி அதாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றுவருகிறது.
இந்த அரையிறுதி போட்டியில் தமிழகம் மற்றும் அரியானா அணிகள் இன்று விளையாடுகிறது. இப்போட்டியானது ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானதில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அரியானா அணியில் தொடக்க வீரர்களாக யுவராஜ் சிங் மற்றும் அங்கித் குமார் களமிறங்கினர். இதில் அங்கித் குமார் 12 ரங்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஹிமான்ஷு ராணா களமிறங்கினார்.
ராணா மற்றும் யுவராஜ் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. இதில் யுவராஜ் சிங் 29 வது ஓவரில் 65 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அப்போது 7 வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சுமித் குமார் சிறப்பாக விளையாடி 3 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 48 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
ஆரம்பத்தில் களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ராணா 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 118 பந்துகளில் 116 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக 50 ஓவரிகள் முடிவில் அரியானா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 293 ரன்களை எடுத்தது. தமிழகம் சார்பில் அதிகபட்சமாக நடராஜ் 3 விக்கெட்களும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனால் தமிழக அணிக்கு 294 ரன்கள் வெற்றி இலக்காக உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக பேட்டிங் செய்து வருகிறது.