பால் உற்பத்தி செய்ய சிரமப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இந்த செய்தி யானை பசிக்கு சோளப்பொறி என்ற நிலையில் உள்ளது என மாநில செயலாளர் பாரதீய கிசான் சங்கம் வீரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
கடுமையான நிதி நெருக்கடிகளும் மக்கள் நெருக்கம் மிகுந்த தமிழக தலைநகரத்தில் மிகப்பெரிய வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக மூன்று ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வு வேண்டும் என்பது சரியா? என்ற ஊடகவியளரின் கேள்வி அவரின் பார்வையில் நியாயமானது தான் ஆனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
பால் உற்பத்தி செய்ய சிரமப்பட்டு வரும் விவசாயிகளுக்கு இந்த செய்தி யானை பசிக்கு சோளப்பொறி என்ற நிலையில் உள்ளது. தமிழக அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
அல்லது தற்போதைய இந்த அறிவிப்பு ஊக்கத்தொகை என்ற நிலை மாறி கொள்முதல் விலை என்று அறிவிக்க வேண்டும் என்பது தமிழக பால் உற்பத்தியாளர்களின் நிலை மேற்படி கருத்தை அரசுக்கு தெரிவிக்கிறோம் நன்றி!