அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் (AASU) முன்னாள் செயலாளர் உட்பட சுமார் 300 பேர் பாஜகவில் இணைந்தனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில், பாஜக மாநில தலைவர் மற்றும் மூத்த தலைவைர்கள் முன்னிலையில், அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதுகுறித்து அசாம் அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா கூறுகையில், ‘‘பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பலர், கட்சியில் சேர பாஜக தலைமையைத் தொடர்பு கொண்டுள்ளனர் என்று கூறினார்.
முன்னதாக, அசாம் பாஜக எம்எல்ஏ திகந்தா கலிதா காங்கிரஸை கடுமையாக சாடினார். காங்கிரஸின் ஊழலுக்கு எதிராக நாட்டு மக்கள் இப்போது களமிறங்குகிறார்கள்.
இராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நாட்டின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது என்று கூறினார்.
மேலும், 2024 மக்களவைத் தேர்தலில், அசாம் மாநிலத்தில், குறைந்தது 12 இடங்களை பாஜக வெல்லும் என்று கூறினார்.