இந்தியாவில் உள்ள சிறந்த 100 ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு நாளை ‘ தி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் ‘ விருதினை வழங்கவுள்ளது.
இந்தியாவில் முதல் ரயில் ஆனது 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி இயக்கப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ரயில்வே வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் “அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்” என்ற விருது வழங்கப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 69வது ரயில்வே வார விழாவில் வழங்கப்டுள்ளது. இதனை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதுகளை வழங்கவுள்ளார்.
இந்தாண்டு இந்திய அளவில் 100 பேர் இந்த விருதுக்கான தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ரயில்வேவில் 6 ஊழியர்கள், 3 அதிகாரிகள் தேர்வாகியுள்ளார்கள்.
இந்த விருதுக்காகத் தமிழகத்திலிருந்து மதுரையைச் சேர்ந்த வீரப்பெருமாள் தேர்வாகியுள்ளார். இவர் மதுரை கோட்டத்தில் மானாமதுரையில் பணியாற்றுபவர்.
இவர் மானாமதுரை தண்டவாளப் பாதையில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டிருந்தபோது, பழுதடைந்தநிலையில் தண்டவாளம் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக தகவல் கொடுத்து சென்னை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்க உதவினார்.
அடுத்து ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் எர்ணாகுளம் விரைவுவண்டி ரயிலை இயக்கியபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானையைப் பார்த்த உடனே அவசரக்கால பிரேக்கைப் பயன்படுத்தி ரயில் தடம் புரள்வதைத் தவிர்த்ததுடன், யானையின் உயிரையும் காப்பாற்றினார்.
இதேபோல் டிக்கெட் ஆய்வாளர் டி.செல்வகுமார், ரயில்வே குற்ற வழக்குகளைத் திறமையோடு கையாண்ட ரயில்வே காவல் ஆய்வாளர் ஸ்ரீதேஷிதி மதுசூதன ரெட்டி, ஆவடி எமு கார் ஷெட் சீனியர் பிரிவு பொறியாளர் ஏ.செல்வராஜா, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை தலைமை செவிலியர் துர்காதேவி விஜயகுமார் விருதைப் பெறுகின்றனர்.
மேலும், முதுநிலைக் கோட்ட வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை கோட்டப் பொறியாளர் எஸ்.மயிலேறி, ரயில்வே தகவல் தொழில்நுட்ப அலுவலர் எஸ்.மாரியப்பன் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் சார்பாக அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதினைப் பெறுகின்றனர்.