விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது பரிந்துரை பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இந்தியாவில் நடந்துமுடிந்தது. இந்த தொடரின் இந்தியப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 ரன்களை வீழ்த்தினார்.
அதேபோல் இவர் 2015 ஆம் ஆண்டின் உலகக்கோப்பையில் 15 விக்கெட்களையும், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் 16 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். இந்த மூலம் உலகக்கோப்பை தொடரில் முகமது ஷமி மொத்தமாக 55 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இப்படி உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாகத் திகழ்ந்த முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் அர்ஜுனா விருதும் ஒன்று.
அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல்:
முகமது ஷமி – கிரிக்கெட்
அஜய் ரெட்டி – பார்வையற்றோருக்கான கிரிக்கெட்
ஓஜஸ் பிரவின் தியோடலே மற்றும் அதிதி கோபிசந்த் சுவாமி – வில்வித்தை
ஷீதல் தேவி – பாரா வில்வித்தை
பருல் சவுத்ரி மற்றும் எம் ஸ்ரீசங்கர் – தடகளம்
முகமது ஹுசாமுதீன் – குத்துச்சண்டை
ஆர் வைஷாலி – செஸ்
திவ்யகிருதி சிங் மற்றும் அனுஷ் அகர்வாலா – குதிரையேற்றம்
திக்ஷா தாகர் – கோல்ப்
கிரிஷன் பகதூர் பதக் மற்றும் சுசீலா சானு – ஆண்கள் ஹாக்கி
பிங்கி – புல்வெளி பந்து
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் – துப்பாக்கிச் சுடுதல்
ஆன்டிம் பங்கல் – மல்யுத்தம்
அய்ஹிகா முகர்ஜி – டேபிள் டென்னிஸ்