சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படை வீரர் கொல்லப்பட்டார், ஒருவர் காயமடைந்துள்ளார்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் குண்டுவெடிப்பில் ஆயுதப்படையின் 9 வது பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கமலேஷ் சாஹு கொல்லப்பட்டார், மற்றொரு கான்ஸ்டபிள் வினய் குமார் சாஹு காயமடைந்தார்.
இறந்த ஜவான், மாநிலத்தின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். காயமடைந்த ஜவான் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அப்பகுதியில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறை மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர்களின் கூட்டுக் குழுவின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பத்து பாதுகாப்புப் வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுனர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.