விஜய் ஹசாரே தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியின் தமிழக வீரர் பாபா இந்திரஜித் வாயில் கட்டுப்போட்டுக் கொண்டு களமிறங்கி பேட்டிங் செய்தார்.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ளது. இதன் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் மற்றும் அரியானா அணிகள் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்கள் சேர்த்தது.
அடுத்துக் களமிறங்கிய தமிழக அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்களை எடுத்தது. தமிழக அணியின் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 64 ரன்களை எடுத்தார்.
இவர் களமிறங்கிய போதே வாயில் கட்டுப்போட்டுக் கொண்டு களமிறங்கினார். இந்த சம்பவம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாயில் கட்டுப்போட்டுக் கொண்டு அதற்கு மேல் ஹெல்மட் அணிந்து விளையாடிய இந்திரஜித், 71 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
இவர் வாயில் கட்டுடன் களமிறங்கியது எதனால் என்று ரசிகர்கள் குழம்பினர். அதற்கு தோல்விக்கு பின் தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பாபா இந்திரஜித் உதடில் காயம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார்.
அரியானா பேட்டிங் முடிவடைந்த பின் தமிழக வீரர் இந்திரஜித் பாத் ரூமில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கால் தவறி வழுக்கி விழுந்த போது, உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயம் கொஞ்சம் பெரியளவில் இருந்ததால், அதிகளவிலான ரத்தம் வெளியேறியுள்ளது. வெளி உதடு மட்டுமல்லாமல் உள் உதட்டிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
போட்டி முடிவடைந்த பின் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.