நாட்டில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நாட்டில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் காசநோய் எதிர்ப்பு மருந்துகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன,
மேலும் மத்தியக் கிடங்குகள் முதல் புறநகர் சுகாதார நிறுவனங்கள் வரை பல்வேறு நிலைகளில் இருப்பு நிலைகள் பற்றி வழக்கமான மதிப்பீடுகள் நடத்தப்படுகின்றன.
மேலும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அவசரகால தேவைகளைப் பூர்த்தி செய்ய, தேவைப்படும்போது வரையறுக்கப்பட்ட அளவுக்கு உள்ளூர் கொள்முதலுக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 6 மாதங்களுக்கான காசநோய் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.