தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆயுஷ் மருத்துவர்களின் மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
டிசம்பர் 14-ம் தேதி சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆயுஷ் மருத்துவர்களின் மாநாடு நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ரவி, நமது மக்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பங்கு அதிகரித்துள்ளதையும், அவற்றின் சந்தை பங்களிப்பு பிரதமர் மோடியின் முன்முயற்சிகள், சுமார் ₹2 லட்சம் கோடியாக உயர்ந்து எப்படி அதிகரித்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
மேலும், ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் துறைகளில் அதிக ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுமாறும் ஆளுநர் வலியுறுத்தினார்.