பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் பாபர் அசாம் கூட இல்லை, ஆனால் அந்த தேடலில் ஒரு இந்திய வீரர் உள்ளார்.
கூகுளில் அதிக தேடப்படுபவர் பட்டியலை ஆண்டுதோறும் கூகுள் நிறுவனம் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டது.
அதில் பாகிஸ்தான் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரரை பற்றி தான் ஆச்சரியமாக உள்ளது. ஆம் பாகிஸ்தான் அதிகமாக தேடப்பட்டவர் பட்டியலில் பாபர் ஆசாம் கூட இடம்பெறவில்லை. மாறாக ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தான் இடம்பிடித்துள்ளார்.
அவர் விராட் கோலியும் இல்லை, இந்த ஆண்டு பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் 8 வது இடத்தில் உள்ளார்.
இருப்பினும், இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான அப்துல்லா ஷபீக் மற்றும் சவுத் ஷகீல் மற்றும் வளர்ந்து வரும் திறமையான கிரிக்கெட் வீரர் ஹசீபுல்லா கான் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு பெறும் பலமாக இருந்த கிளென் மேக்ஸ்வெல் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல் பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கானும் இடம்பிடித்துள்ளார்.