தலைநகர் டெல்லியின் பதேபூர் பெரி பகுதியில் உள்ள கிடங்கில் நேற்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெல்லியின் பதேபூர் பெரி பகுதியில் உள்ள கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இருபது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.
அப்பகுதியில் வீசிய காற்றின் வேகம் காரணமாக, தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்கள் சிலர் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.