கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வானமானது போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது.
இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரயில்வே துறையில் இருந்து சுமார் 2.94 லட்ச காலி பணியிடங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிரப்பப்பட்டுள்ளன என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ” ரயில்வே துறையில் அரசிதழ் பதிவு பெறாத 1.39 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2.37 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரா்கள் பங்கேற்ற கணினி அடிப்படையிலான இரண்டு பெரிய ரயில்வே தோ்வுகள் நடத்தப்பட்டன.
2020, 2021 ஆம் ஆண்டுகளில் 7 கட்டங்களாக 211 நகரங்களில் 15 மொழிகளில் இத்தோ்வுகள் நடத்தப்பட்டன. இதேபோல் 17.08.2022 முதல் 11.10.2022 வரை 5 கட்டங்களாக 1.11 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரா்களுடன் 191 நகரங்களில் 15 மொழிகளில் 551 மையங்களில் 99 அமா்வுகளில் தோ்வுகள் நடத்தப்பட்டன.
2023, செப்டம்பா் 30 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,94,115 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. புதிதாக தோ்வு செய்யப்பட்டவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுப் பிரிவுகளில் உள்ளனா்.
2014-15 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் (செப்டம்பா் 23 வரை) 4,89,696 போ் ரயில்வே பணியாளா் தோ்வு முகமைகளால் பல்வேறு குரூப் சி பதவிகளுக்கு (நிலை -1 மற்றும் பாதுகாப்பு தொடா்பான பதவிகள் உள்பட) தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்று பதிலளித்துள்ளார்.