‘டுங்கி’ திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் வழிப்பட்டார்.
நடிகர் ஷாருக்கான் நடித்து உள்ள திரைப்படம் டுங்கி வருகின்ற 21ஆம் தேதி வெளியாககிறது. இந்தப் படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.
ஜவான் படம் போன்று இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘டுங்கி’ திரைப்படம் வெற்றி பெறவேண்டும் என ஷீரடி சாய்பாபா கோவிலில் மகள் சுஹானா கானுடன் ஷாருக்கான் இன்று பிரார்த்தனை செய்தார்.
இதற்கு முன்னதாக ஷாருக்கான் தனது ஜவான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு செப்டம்பர் 5, 2023 அன்று, திருப்பதி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். இவருடன் அவரது மகள் சுஹானா மற்றும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.