ஆதார் அப்டேட் செய்வதற்காet காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் பெயர், முகவரி பாலினம் தொலைபேசி எண், கைரேகை மற்றும் கருவிழி போன்ற விவரங்களை அப்டேட செய்ய வேண்டும். இவற்றை 10 ஆண்டுகளில் அப்டேட செய்யாதவர்கள் தற்போது அப்டேட் செய்ய வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் தொடர்பான அப்டேட்களை டிசம்பர் 14ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆதார் அப்டேட் செய்வதற்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது . அடுத்த ஆண்டு மாரச் 4ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அப்டேட் செய்து வருவதால் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த முடியும் என்றும், மக்களின் விவரங்கள் துல்லியமாக இருக்கும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.