ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் ஷாஹி இத்கா மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அங்கு ராமர் கோயில் கட்டப்படுகிறது. அதேபோல் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சை, கோயில் தேவஸ்தானத்துக்கும், அங்குள்ள மசூதி அறக்கட்டளைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மதுராவில் உள்ள ஷாஹி இத்கா வளாகத்தில் ஆய்வு நடத்த ஒப்புதல் அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரு வழக்கறிஞரை நியமித்து, ஷாஹி இத்கா வளாகத்தை ஆய்வு செய்வதற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது. வாரணாசியில் உள்ள ஞானவாபி கோயிலில் எந்த முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதோ, அதே முறையில் இந்த ஆய்வு நடத்தப்படவுள்ளது.
எங்கள் விண்ணப்பத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் டிசம்பர் 18 அன்று முடிவு செய்யப்படும். ஷாஹி இத்கா மசூதியின் வாதங்களை நீதிமன்றம் நிராகரித்துவிட்டதாக கோவில் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்தார்.