தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டியில் உள்ள பேக்கரி கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி காயமடைந்த 12 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடையின் சமையலறைக்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.