தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக, உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலித்து வருகிறது.
இந்த நிலையில்தான், உலகில் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா ஜொலிக்கும் என அமெரிக்கா – இந்தியா கூட்டாண்மை மன்றத்தின் தலைவர் ஜான் சேம்பர்ஸ் கணித்துள்ளார்.
அவரது கணிப்புபடி, இந்தியா மீதான நம்பிக்கை உலக நாடுகளிடையே அதிகரித்து வருகிறது.
அடுத்த 40 ஆண்டுகளில் இந்தியா மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் போக்கு குறைந்து விடும். பிராந்திய பொருளாதார சக்தியாக இந்தியா உயர்ந்திருக்கும்.
இந்தியாவின் மக்கள் தொகையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதார பலத்தை மேலும் பலப்படுத்த உதவியாக இருக்கும்.
அதிக அளவில் வேலையாட்கள் கிடைப்பதால், அபார தொழில் வளர்ச்சி பெருகும். திறமை உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு கிடைக்கும்.
குறிப்பாக, உற்பத்தித்துறை, சேவைத்துறை ஆகியவை பெரும் வளர்ச்சி காணும். அடிப்படைக் கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் காணும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி 2021 -ல் 2.7 டிரில்லியன் டாலராக உள்ளது. இது 2030 -க்குள் இது 8.4 டிரில்லியன் டாலராக உயரும் வாய்ப்பு உள்ளது.
இந்த விரைவான பொருளாதார வளர்ச்சி 2030 -ல் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை ஜப்பான் ஜிடிபியை விட அதிகமாகும்.
இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவை இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் என்பது மிகையல்ல.
2030 -ம் ஆண்டளவில், இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய மேற்கு ஐரோப்பியப் பொருளாதாரங்களான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைக் காட்டிலும் பெரிய அளவில் இருக்கும்.
மேலும், 2024-ல் இணையதளம், கிளவுட் ஆகியவற்றைக் காட்டிலும், ஏஐ வளர்ச்சி மிகவும் அபரிதமாக இருக்கும்.
2023-ல் சைபர் தாக்குதல் அதிகரித்தன் விளைவாக, வரும் 2024-ல் தனித்தனித இணைய பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்.