சிறந்த வழக்கறிஞராகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கியமானவராகவும் விளங்கியவர் சர்தார் வல்லபாய் படேல் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களது நினைவு தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேல் அவர்களது நினைவு தினம் இன்று.
சிறந்த வழக்கறிஞராகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கியமானவராகவும் விளங்கியவர். ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப்… pic.twitter.com/sernPtvPdQ
— K.Annamalai (@annamalai_k) December 15, 2023
சிறந்த வழக்கறிஞராகவும், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கியமானவராகவும் விளங்கியவர். ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடியவர்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், முதல் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை தேசத்துடன் ஒருங்கிணைத்த சிற்பி. பாரதப் பிரதமர் நரேந்மிர மோடி, தேச ஒற்றுமைக்காக உழைத்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்காக, அவர் பிறந்த குஜராத் மண்ணில் உலகின் மிக உயரமான ஒற்றுமைக்கான சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் புகழை தமிழக பாஜக
சார்பாகப் போற்றி வணங்குகிறோம், எனத் தெரிவித்துள்ளார்.