இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளதால் இரண்டு அணிகளுக்கும் கோப்பை வழங்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இரண்டாம் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். இதில் சுப்மன் கில் 3 வது ஓவரில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமலே டக் அவுட் ஆகி சென்றார்.
அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யா கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.
சூரியகுமார் யாதவ் பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்களாக வெளுத்து வாங்கினார். அவருடன் விளையாடிய ஜெய்ஸ்வாலும் பௌண்டரீஸ் ஆகா அடித்து விளையாடிவந்தார்.
14 வது ஓவரில் ஜெய்ஸ்வால் 6 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 31 பந்துகளில் 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தஹாடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அப்போது சூரியகுமார் யாதவ் தனது சதத்தை அடித்தார்.
7 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் என மொத்தமாக என 56 பந்துகளில் 100 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் நந்த்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் எடுத்தனர்.
அடுத்ததாக 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மத்தேயு ப்ரீட்ஸ்கே களமிறங்கினர்.
இதில் மத்தேயு ப்ரீட்ஸ்கே 4 ரன்களிலும், ரீசா ஹென்ட்ரிக்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி மோசமாக விளையாடி வந்த சமயத்தில் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ராம் 25 ரன்களையும், டேவிட் மில்லர் 35 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க 14வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 95 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்களும் ஜடேஜா 2 விக்கெட்களும், முகேஷ் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற 2 போட்டிகள் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளதால் இரண்டு அணிகளுக்கும் கோப்பை வழங்கப்பட்டது.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் 100 ரன்களை எடுத்த சூரியகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது. அதேபோல் இத்தொடரின் நாயகன் விருதும் சூரியகுமார் யாதவிற்கே வழங்கப்பட்டது.