அயோத்தி இராமர் கோவில் தலைமை அர்ச்சகராக மோஹித் பாண்டே நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு ராம் மந்திர் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக. 3000 பேரிடம் இருந்த விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்களில் மோஹித் பாண்டேயின் பெயர் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
அதில் தலைமை அர்ச்சகராக உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் வசிக்கும் மோகித் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
ஆனால் இதற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளை உறுப்பினர் காமேஷ்வர் சௌபால், மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஸ்ரீ ராமஜென்மபூமி கோவிலுக்கு தலைமை அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றும், பொய்யான செய்திகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ராமர் கோவிலின் தலைமை அர்ச்சராக சத்யேந்திர தாஸ் இருப்பதாகவும், புதிய அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தற்போது 21 நேர்காணல் நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 6 மாத கால பயிற்சிக்கு பின்னர் தலைமை பூசாரி தேர்வு செய்யப்படுவார் எனவும் அவர் கூறினார்.
கடந்த 32 ஆண்டுகளாக ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக சத்யேந்திர தாஸ் பணியாற்றி வருகிறார். தற்காலிக கோவிலில் ராம் லல்லாவை வழிபட்டு வருகிறார்.
1992 டிசம்பரில் பாபர் கட்டிடம் இடிக்கப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டார். வழிபாடு செய்யும் போது, ஒரு நாள் ராம் லல்லாவின் கோயில் கட்டப்படும் என்று உணர்ந்ததாக அவர் கூறினார். சத்யேந்திர தாஸுக்கு தொடக்கத்தில் மாதம் ரூ.100 ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அது ரூ.13,000 ஆக உயர்த்தப்பட்டது.
சத்யேந்திர தாஸ் பெயரை பாஜக முன்னாள் எம்பி வினய் கட்டியார் மற்றும் விஎச்பி முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் ஆகியோர் முடிவு செய்தனர். 1949 இல் ராம ஜென்மபூமியில் ராம் லல்லாவின் சிலையை நிறுவிய பைராகிகளில் அவரும் ஒருவர்.
1958 இல் வீட்டை விட்டு வெளியேறி, 1975 இல் ஆச்சார்யா பட்டம் பெற்றார், அடுத்த ஆண்டே அவர் சமஸ்கிருத ஆசிரியரானார். பாபர் இடிப்பு நேரத்தில் கூட, ராம் லல்லாவுடன் இருந்த அவர், அப்போதைய நிலையில் சிலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.