சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை சூரியகுமார் யாதவ் சமன் செய்துள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று முடிந்தது.
இதன் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற மூன்றாம் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்றுள்ளதால் இந்த தொடரில் இரண்டு அணிகளுக்கும் கோப்பை வழங்கப்பட்டது.
இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 2000 ரன்களை கடந்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்றையப் போட்டியிலும் சூரியா சாதனை படைத்துள்ளார்.
நேற்றையப் போட்டி 4 வது இடத்தில களமிறங்கிய சூரியகுமார் தனது அதிரடியான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை மிரளவைத்தார்.
இவர் மொத்தமாக 8 சிக்சர்கள் மற்றும் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 55 பந்துகளில் 100 ரன்களை எடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் தன்னுடைய 4 வது சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை சூரியா சமன் செய்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் 4 சதங்களை விளாசி முதலிடத்தில் இருந்தனர்.
தற்போது சூர்யகுமார் யாதவ் 4வது சதத்தை அடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மண்ணிலும் சதம் அடித்துள்ளார்.
இந்த நிலையில் சதம் விளாசியதால் ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கு அளிக்கப்பட்டது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ள 14வது ஆட்ட நாயகன் விருதாகும். இதன் மூலமாக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 115 டி20 போட்டிகளில் விளையாடி 15 முறை ஆட்டநாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். இதனால் விரைவில் விராட் கோலியின் இந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் தொடர் நாயகன் விருதும் சூர்யகுமாரர் யாதவ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.