யுனிடிராய்ட் தேர்தல்: இந்தியப் பெண் வெற்றி!
Jul 29, 2026, 09:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுனிடிராய்ட் தேர்தல்: இந்தியப் பெண் வெற்றி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றியாக, தனியார் சட்டத்தை ஒன்றிணைப்பதற்கான சர்வதேச நிறுவனத்தின் (UNIDROIT) ஆளும் கவுன்சிலுக்கான தேர்தலில் இந்திய வேட்பாளர் உமா சேகர் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

UNIDROIT என்பது இத்தாலி நாட்டி ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு சுயாதீன அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது உலகளவில் வணிகச் சட்டத்தில் சீரான தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த அமைப்பின் ஆளும் கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெற்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தேர்தலில் அமெரிக்கா, சீனா, சௌதி அரேபியா, துருக்கி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 32 பேர் போட்டியிட்டனர். ஆளும் குழுவில் ஒரு பதவியைப் பெறுவதற்குத் தேவையான வரம்பு 21 வாக்குகளாகும். ஆனால், முதல் சுற்றில் 59 வாக்குகளில் 45 வாக்குகளை உமா சேகர் பெற்றார்.

இதனால், அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டது. இது இந்திய வேட்பாளர் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் கணிசமான ஆணையையும் நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது. மேலும்,  உறுப்பு நாடுகளிடமிருந்து அவர் பெற்ற அமோக ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதன் மூலம் 2024 – 28 காலக்கட்டத்தில் ஆளும் குழுவில் இந்தியா உறுப்பினராக இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவின் வேட்பாளர்கள் ஆளும் குழுவில் எந்தப் பதவியையும் பெறவில்லை. ஆகவே, உமாவின் இச்சாதனை இன்னும் குறிப்பிடத்தக்கதாகிறது. மேலும், உமா வெற்றியின் அறிவிப்பு சர்வதேச சட்ட உலகில் இந்தியாவின் நிலையை உயர்த்தி இருக்கிறது.

தவிர, ரோம் அடிப்படையிலான அமைப்பின் ஆளும் குழுவில் ஒரு இடத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்று தருணத்தை உமா சேகர் பெற்றிருக்கிறார்.

Tags: ElectionUNIDROITIndia'sUma SekharWin
ShareTweetSendShare
Previous Post

கோலியைத் தொடர்ந்து ரோகிதின் சாதனையைச் சமன் செய்த சூரியகுமார்!

Next Post

அயோத்தி கோவில் இராமர் சிலையை உருவாக்கியது யார் தெரியுமா ? 

Related News

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies