பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது யார் என்று பார்த்தால், திமுக, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்டுகள்தான் முன் வரிசையில் நின்று போராடுகிறார்கள் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
ஒரு சம்பவம் நடந்துவிட்டது என காவல் நிலையத்திற்கு புகார் வந்தால், அந்த சம்பவம் நடந்ததால் பயன் அடைவது யார்? என்னும் கோணத்தில் விசாரிப்பார்கள்! இந்த லாபத்திற்காக இந்த கொலை செய்யப்பட்டிருக்குமா? என்னும் கோணத்தில் விசாரிப்பார்கள்!
நாடாளுமன்றத்தில் புகைப்பரப்பும் சம்பவம் நிகழ்ந்ததால், ஆதாயம் அடையும் வகையில், பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது யார் என்று பார்த்தால், திமுக, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்டுகள்தான் முன் வரிசையில் நின்று போராடுகிறார்கள்!
இவர்கள்தான், பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல், ஜல்லிக்கட்டை தடை செய்துவிட்டு ”ஜல்லிக்கட்டு வேண்டும்” என போராட்டம் நடத்தினார்கள்!
(காங்கிரஸ் திமுக கூட்டனி ஆட்சியின்போது, காங்கிரசின் மத்திய அமைச்சர் ஜெயராம்ரமேஸ் அவர்கள், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காலை மாடுகளை சேர்த்ததால் தான் ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்தது! பின்னர் காங்கிரசும் திமுகவும் ஜல்லிக்கட்டு வேண்டும் என போராடுவதாக நடித்தன!)
நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்தின் உள்ளேயும் புகைப்பரப்பப்பட்டதன் காரணம் என்ன? என விசாரணையை துவங்கியதுமே ”முதல் சந்தேகம்”, ”இந்த சம்பவத்திற்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்”- ” புதிய கட்டிடம்தான் காரணம்” என சொல்லி போராட்டம் நடத்துவோர் மீது விழுகிறது!
மூன்று மாநிலங்களில் வெற்றிவாகை சூடிக்கொண்டிருக்கும் அரசுக்கு எதிராக, குறை ஏதும் சொல்ல முடியாத அரசுக்கு எதிராக இப்படியெல்லாம் போராட்டம் நடத்திட ஒரு வாய்ப்பினை போராட்டக்காரர்களுக்கு புகைச்சம்பவம் வழங்கியிருக்கிறது!
எனவே, இயல்பாகவே போராட்டக்காரர்களை விசாரிக்க வேண்டிய பொறுப்பு விசாரணை அமைப்புகளுக்கு இருக்கிறது! பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தியதற்காக தற்காலிகநீக்கம் செய்யப்பட்டுள்ள; கனிமொழி உட்பட 14 எம்.பிக்களையும்கூட இந்த சம்பவம் சம்மந்தமாக விசாரிக்க வேண்டும்!
புதிய நாடாளுமன்றத்தை கொள்கை ரீதியாகவே எதிர்த்து வந்தவர்கள் எதிர்கட்சியினர்! புதிய நாடாளுமன்ற கட்டிடம் சரி இல்லை! எனவேதான் இப்படி நடக்க முடிந்திருக்கிறது! என்று இப்போது எதிர்கட்சிகள் பேசுகின்றன! இப்படி பேசுவதற்காகவே இந்த சம்பவம் நடத்தப்பட்டதா? என ஒரு கேள்வி எழுகிறது!
மெட்டர் டிடக்டர் மெட்டல் பொருட்களை மட்டும் டிடெட் செய்யும்! பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மெட்டலாகவே இருக்கும்! இது பிளாஸ்டிக்கில் அடைத்து வைக்கப்பட்ட கலர் வாய்வு! சூவுக்குள் மறைத்து வைத்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள்! சூவுக்குள் மறைத்து வைத்திருந்தாலும், சூவையும் சோதித்திருக்க வேண்டும்! இது பாதுகாப்பு அதிகாரிகளின் குறைபாடுதான்! பாதுகாப்பு அதிகாரிகளை கண்டிப்பதை விடுத்து உள்த்துறை அமைச்சரையும், சபாநாயகரையும் குறைசொல்வதும், உள்துறை அமைச்சர் இதற்காக ராஜினாமா செய்யவேண்டும் என போராடுவதும் அபத்தமானது!
உயர் மதிப்பு நோட்டுகளை செயலிழக்கச்செய்து கள்ளப்பண ஆதிக்கத்தையும் கருப்புப்பண ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்டி, காஷ்மீரின் 370 ஐ நீக்கி பயங்கரவாத ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நியாயம் வழங்கி, ஊழல் வாதிகளை குறிவைத்து தாக்கி அழித்துவரும் அரசின் உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமாம்! நாடாளுமன்ற பாதுகாப்பு சோதனையில் அதிகாரி தவறு இழைத்ததால் அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால், அதிகாரியை தவறிழைக்க தூண்டும் வகையில் ஏதோ ஒன்று செயல்பட்டிருக்கிறதா? என சோதிக்க வேண்டியதும் அரசின் கடமையாகிறது!
அந்த இரண்டு நபர்களுக்கு அனுமதி சீட்டு கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத அரசு பணம் வாங்கிக்கொண்டு இந்திய தொழில் அதிபர் மீது பழி சுமத்தும் கேள்விகளை கேட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவாமொய்தரா மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று கேட்கிறார்கள், போராட்டம் நடத்தி சஸ்பெண்ட் ஆன எம்.பிக்கள்!
நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை பார்க்கட்டும்! இது அவர்களின் மன்றம்! என்னும் அடிப்படையில் அரசு திகழும் சூழலில் அனுமதி கோரிய தமது தொகுதியை சார்ந்த இந்திய குடிமகனுக்கு பார்வையிட அனுமதி வழங்கியது குற்றமாம்! அந்நியர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, இந்திய தொழிலதிபரை இழிவுசெய்யும் கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குற்றம் இல்லையாம்! போராட்டம் நடத்திய 14 எம்.பிக்களின் மனநிலை நாட்டுக்கு எதிரானதாகவே இருக்கிறது!
நாடாளுமன்றம் பழைய கட்டிடத்தில் இருந்தபோது அமைச்சர்களின் அலுவலகங்களும் பிரதமரின் அலுவலகங்களும் டெல்லியில் ஆங்காங்கு காங்கிரஸ் காரர்களின் சொந்த கட்டிடங்களில் வாடகைக்கு இருந்தது!
அந்த வகையில் காங்கிரஸ் காரர்கள் வருடம் ரூபாய்.1000 கோடியை அணியாக வாடகையாக பெற்றுவந்தனர்! காங்கிரஸ் கட்சியின் கட்டிடங்கள்தான் இதில் பல என்று சொல்லப்படுகிறது! அரசு வாரி தருவதுதான் வாடகை! இப்படி வாடகைமூலம் அடிக்கப்பட்ட கொள்ளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தால் தடைப்பட்டு விட்டது! காரணம், அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும் இப்போது வாடகை கட்டிடங்களிலிருந்து மாற்றப்பட்டு, அரசின் சொந்த கட்டிடமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டது! இதனால் காங்கிரசுக்கு மிகப்பெரிய பண நஷ்டம்!
வாடகை மிச்சமே 1000 கோடி! நாடாளுமன்றம் கட்டி முடிக்க செலவு 971 கோடிதான்! இந்த புதிய கட்டிடத்தை பார்த்ததும் காங்கிரஸ் காரர்களுக்கு வயிற்றெரிச்சல் ஆனது! என்ன செய்யலாம் என யோசித்தார்கள்! இப்போது செய்தாகி விட்டதென்று, ஒரு பேச்சு அடிப்படுகிறது!
இதிலிருந்து அரசு அதிக எச்சரிக்கையினை மேலும் கொண்டுவிடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்! இந்த நிகழ்வில் இருந்து அரசு மேலும் பாடம் கற்று மிக சிறப்பான பாதுகாப்பினை வலுப்படுத்தும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது!
இந்த செயலில் ஈடுபட்டவர்களையும், இதன் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிந்து கடுமையான தண்டனையை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை! எனத் தெரிவித்துள்ளார்.