பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று போலீசார் முன்னிலையில் விசாரணை கைதி ஒருவர் இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் சிக்கந்தர்பூரில் வசிக்கும் அபிஷேக் குமார் என்பவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் கைது செய்து, இன்று பாட்னாவில் உள்ள டானாபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, அழைத்து சென்றனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இரண்டு பேர் விசாரணை கைதியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.
உடனடியாக தாக்குதல் நடத்திய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் முசாபர்பூரைச் சேர்ந்தவர்கள்.
அவர்களை அனுப்பியது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என பாட்னா மேற்கு காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறினார்.
நீதிமன்ற வளாகத்தில் விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதிதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.