மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அலக்நந்தா, ரோகிணி செக்டார் -16, வசந்த் விஹார் ஆகிய இடங்களில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்களையும் மற்றும் என்.ஐ.டி.ஆர்.டி.யில் ஒரு ரோபோடிக் பிரிவையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
“341 சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்கள் 44 லட்சம் பயனாளிகளுக்கு சேவை செய்து வரும் நிலையில், தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் நிறுவனத்தில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்கள் மற்றும் ரோபோட்டிக் பிரிவு தொடங்கப்படுவது அவர்களின் சுகாதார வசதிகளில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை கணிசமாக அதிகரிக்கும்” என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
அலக்நந்தா, ரோகிணி செக்டார் -16, வசந்த் விஹார் ஆகிய இடங்களில் மூன்று சி.ஜி.எச்.எஸ் நல்வாழ்வு மையங்களையும், என்.ஐ.டி மற்றும் ஆர்.டி.யில் ஒரு ரோபோட்டிக் பிரிவையும் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மத்திய வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுகள் துறை இணையமைச்சர் டாக்டர் மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய டாக்டர் மாண்டவியா, “அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக, சி.ஜி.எச்.எஸ்-ன் கீழ் வரும் நகரங்களின் எண்ணிக்கை 2014-ல் 25 ஆக இருந்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த மையங்கள் விரைவில் இந்தியாவின் 100 நகரங்களை சென்றடையும்’’ என்று கூறினார்.
சி.ஜி.எச்.எஸ்ஸின் “உங்கள் உடல்நலம், எங்கள் குறிக்கோள்” என்ற இலக்கை மீண்டும் உறுதிப்படுத்தினார். “சி.ஜி.எச்.எஸ் பயனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு மிக அருகில் சுகாதார சேவைகளைப் பெற முடியும் என்பதை உறுதி செய்வது எங்கள் குறிக்கோள், நாட்டின் உள்ள மூலைமுடுக்குகளுக்கு எல்லாம் வசதியை விரிவுபடுத்துகிறது” என்று கூறினார்.
“அறுவை சிகிச்சை தேவைப்படும் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உகந்த சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்காக ரோபோடிக் அறுவை சிகிச்சை அவர்களுக்கு சரியான கவனிப்பை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
“நாட்டின் கடைசி மைல் வரை அணுகக்கூடிய மற்றும் குறைந்தக் கட்டணத்தில் மருத்துவச் சேவைகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள் மற்றும் ஆரோக்கியமான தேசத்தின் அடித்தளம்” என்று குறிப்பிட்டார்.
ஆரோக்கியமான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய மற்றும் வளமான தேசத்தை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியவர் “குறைந்த விலையில் தரமான சுகாதார சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில், சுகாதார அமைச்சகம் பல அடுக்கு அணுகுமுறையை பின்பற்றியுள்ளத.
இதில் சுகாதார அமைச்சகம் தனியார் மருத்துவமனைகளில் சி.ஜி.எச்.எஸ் தொகுப்புகளின் கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது, இது பயனாளிகள் மற்றும் மருத்துவமனைகள் இருவருக்கும் பயனளிக்கும் தரமான சுகாதார சேவைகளை பயனாளிகள் அணுக உதவுகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பித்ததைப் போலவே, இந்த நோக்கத்திற்காக தேசிய சுகாதார ஆணைய தளம் பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த வசதி பயனாளிகளுக்கு முன்னுரிமை சிகிச்சையை வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு வளங்களை வழங்கும் செயல்முறைகளை எளிதாக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.