கேரளாவில் அதிகரிக்கும் கொரோன தொற்று, நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகள் கொரோனாவால் மொத்தமாக முடங்கிப் போனது.
கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே பல மாதங்கள் கழித்து இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளா அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. இத்தகைய சூழலில் தான் கேரளாவில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் பின்னணி காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பரிசோதனைகள் என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மாத்திரை, மருந்துகள் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது மாஸ்க் அணிதல், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல், கொரோனா பாதிப்புக்கான அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்வது, அறிகுறி உள்ளவர்களை விட்டு விலகி இருப்பது உள்ளிட்டவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளார்.