பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை இனி ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும்.
ஒவ்வொருவரின் பிறப்பும், இறப்பையும் அரசு தவறாமல் பதிவு செய்கிறது. காரணம், ஒவ்வொருவரின் பிறப்பு சான்றிதழை வைத்தே அவர்களுக்கான அரசின் சலுகை, கல்வி, வேலை வாய்ப்பு, தேர்தல் அடையாள அட்டை, உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அதேபோல, ஒரு மனிதரின் இறப்பு குறித்தும் தவறாமல் அரசு பதிவு செய்கிறது. இதற்கு காரணம், சொத்து உள்ளிட்ட விவகாரங்களில் தீர்வு காண வசதியாக இருக்கும்.
இதனால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பெறுவதற்கு, அந்த அந்த தாலுக்கா அலுவலகம் சென்று அலைந்து திரிந்து வாங்கிய நிலை இதுவரை இருந்து வந்தது.
இந்த நிலையில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை இனி ஆன் லைனிலேயே இலவசமாக பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.அதாவது, 2018 -ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி முதல் பிறப்பு மற்றும் இறப்புகள் https://crstn.org என்ற இணையதளம் மூலம் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்படுகிறது.
2018-க்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் தேவை எனில் https://crstn.org என்ற இணையதளத்தின் வாயிலாக பொது மக்களே இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.