ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் 5-ம் கட்ட பாதயாத்திரை நாளை தொடங்குகிறது.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகள் சாதனைகளைத், தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தைப் பாஜக மாநிலத் தலைவர் தலைவர் K.அண்ணாமலை, கடந்த 6 மாத காலமாக, தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், மக்களைச் சந்தித்து வருகிறார்.
மக்களின் பேராதரவோடு ‘என் மண் என் மக்கள் 4 கட்டப் பயணம் மாபெரும் வெற்றி அடைந்தநிலையில், அதன் 5-கட்ட பாதயாத்திரையின் பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 5-ம் கட்ட “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை திண்டிவனம் மற்றும் செஞ்சியில் நடைபெறயுள்ளது.