பல பெண்களுடன் தனது கணவர் தொடர்பில் இருப்பதாக, சின்னத்திரை நடிகர் ராகுல் ரவியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனால், ராகுல் ரவி தலைமறைவாகிவிட்டார்.
மலையாள சின்னத்திரையில் கலக்கி வந்தவர் ராகுல் ரவி. இவர் மலையாளத்தில், பகத் பாசில் மற்றும் துல்கர் சல்மான் உள்ளிட்ட படங்களில் நடிடித்து புகழ் பெற்றவர். தமிழில் நந்தினி என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். மேலும், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சாக்லேட் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்தார்.
இதனிடையே, லட்சுமி நாயர் என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். அவரையே திருமணமும் செய்து கொண்டார்.இந்த நிலையில், பல பெண்களுடன் தனது கணவர் ராகுல் ரவி தொடர்பில் உள்ளார். எனவே, அவர் மீது உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என லட்சுமி நாயர் புகார் அளித்தார்.
ஏற்கனவே, இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றிருந்தார் ராகுல் ரவி. ஆனால், தற்போது காலக்கெடு முடிந்துவிட்டதால், போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கருதி தலைமறைவாகிவிட்டார்.