ஒரு பேராசைக்காரனின் பிரார்த்தனை காரனமாக இறைவன் அவனிடம் வந்தானாம்! உனக்கு என்னவேண்டும்? என இறைவன் கேட்க, பேராசைக்காரனோ என்கண்ணில் படும் பொருள்யாவையும் எனதாக வேண்டும் என்று கேட்டாணாம்! இறைவனும் புன்னகைத்தவாறு சரி என்றானாம்.
பேராசைக்காரன் நின்ற இடத்தில் கண்ணில் பட்டதையெல்லாம் பார்த்துவிட்டு அது போதாதென்று நகர்ந்து சென்று அங்கு கண்ணில் படுவதையெல்லாம் பார்த்தானாம். அப்படியே கண்ணை திறந்து பார்த்தவாறு ஓடினானாம்! ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்!
ஓடி ஓடி கண்னில் பட்டதையெல்லாம் ”எனக்கு” ”எனக்கு” என சொல்லிக்கொண்டே ஓடினானாம்! இவன் பார்த்த இடத்தில் ஏழை எளியவர்களின் வீடுகள், கழனிகள் எல்லாம் இருந்தனவாம்! இவன் எனக்கு எனக்கு என கத்தியவாறு ஓடினானாம். இறைவனும் சரி சரி என சொன்னவாறு இவனோடு வந்தாராம்! இறுதியில் அதிக களைப்பு காரணமாக ஓடமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு செத்து விழுந்தானாம்! இறவன் சிரித்தானாம்!
திரு.கருணாநிதி அவர்கள் ஓடி ஓய்ந்து இறந்துவிட்டார்! அவரின் சொத்தும் பினாமிகளின் சொத்தும் 100 லட்சம் கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது! இப்போது தயிர்வடை படையலை ஏற்கும் அவரது ஆவி ஓடுகிறதோ என்னவோ! திரு.கருணாநிதி அவர்களின் மகனும் கருணாநிதியின் சொத்தான திமுகவின் தலைவரும் கருணாநிதியின் வாரிசு என்னும் அடிப்படையில் முதலமைச்சர் ஆனவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒரு முறை சேலத்திற்கு ஒரு பயணமாக சென்றாராம்!
அங்கே கம்பீரமாக ஒரு வளைவு இருந்ததாம்! அது ”மாடர்ன் தியேட்டர்” என நாடகம் மற்றும் சினிமா சாதனையாணரான காலஞ்சென்ற டி.ஆர்.சுந்தரம் அவர்கள் நிறுவி வெற்றிகரமாக நடத்திய, மார்டர்ன் தியேட்டர் என்னும் பழம்பெரும் சமுதாய நிறுவனத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வளைவு! கருணாநிதியின் மகனான மு.க. ஸ்டாலினின் அவர்களின் கார் அங்கு அவசர கதியில் காரணமே இல்லாமல் நின்றிருக்கிறது! கீழே இறங்கிய மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த ஆர்ச்சையும் தன்னையும் இணைத்து ஒரு செல்பியை அவரது செல்போனில் எடுத்துள்ளார்!
இன்றைய முதலமைச்சரின் தந்தையாரும் முன்னால் முதலமைச்சருமான கருணாநிதிக்கு அந்த வளைவுக்கு சொந்தக்காரரான காலஞ்சென்ற டி.ஆர்.சுந்தரம் முதலாளியாக இருந்துள்ளாராம்! முதலமைச்சர் முக.ஸ்டாலின் செல்பி எடுத்ததை பார்த்த அனைவரும் தந்தையின் முதலாளிக்கு மரியாதை தருகிறார் முதலமைச்சர் என்று நினைத்தார்களாம்!
ஆனால் அன்று இரவு 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரிடமிருந்து ஒரு தொலைப்பேசி அந்த வளைவு யாருடைய சொத்தாக இப்போது அரசின் பத்திர பதிவுபடி இருக்கிறதோ அவருக்கு வந்ததாம்! மாவட்ட ஆட்சி தலைவர் சொன்னாராம் முதலமைச்சர் உங்களை பார்க்க விரும்புகிறார் என்று!
முதலமைச்சரை இவர் தனது மனைவியோடு பார்த்தபோது, ”எப்படி இருக்கிறீர்கள்?” ”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டுவிட்டு, எனக்கு அந்த ஆர்ச் வேண்டும் எழுதி கொடுத்துவிடு! எனது தந்தை இங்கே உங்கள் டி.ஆர்.சுந்தரம் அவர்களிடம் வேலை பார்த்தார்! எனவே எனக்கு அந்த ஆர்ச் இருக்கும் இடம் வேண்டும் நான் அங்கே ஊர் பணத்தில் எங்கள் அப்பாவுக்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்று பேசினாராம்! அதிர்ச்சியடைந்த அவர் “நான் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து சொல்கிறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவினாராம்!
நில ஆக்கிரமிப்பு என்பது இதுதான்! முதலமைச்சரே நேரில் சந்தித்து எழுதி கொடு என்று கேட்பது எவ்வளவு பெரிய மிரட்டல்? பின்னர் அவர் மறுப்பு தெரிவிக்கவே அதே ஊரில் அவர் கட்டிக்கொண்டிருந்த இன்னொரு கட்டிடம் அரசாங்கத்தால் இடித்து தள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது! மாவட்ட ஆட்சித்தலைவரும் முதலமைச்சரின் தந்தைவேஷத்திற்கு அடிபனிந்திருப்பதும், அவரும் சேர்ந்து மிரட்டுவதும், கட்டிடங்களை இடித்து தள்ளுவதும் அராஜகத்தின் உச்சம்! மத்திய அரசால் நியமிக்கப்படும் மாவட்ட ஆட்சியர்களையே இப்படி ஆட்டிப்படைக்கும் திமுக நிர்வாகம் மாநில அரசில் பணி புரியும் நிர்வாகிகளை எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள்?
கருணாநிதியின் பேரனும் மாநில மந்திரியுமான உதயநிதி அவர்கள், மாநில அரசையே தனது கட்டுப்பாட்டில் வைக்கும் அதிகாரம் உடைய மத்திய அரசின் மந்திரியை பார்த்து “உங்களிடம் இருப்பது உங்கள் அப்பன் வீட்டு பணமா? இப்படி கொடுங்கள்” என்று அதட்டி கேட்கிறார்! ”அதுவும் எங்கள் அப்பன் வீட்டு சொத்துதான்” என்பதைப்போல இருக்கிறது அவரது குரல்!
கன்ணில் கண்டதெல்லாம் எங்களுக்குதான் என்னும் பேராசை-மனிதனின் கொள்கையைப்போன்றதொரு கொள்கைதான், கருணாநிதி அவர்களின் மகனிடமும் பேரனிடமும் காணப்படுகிறதோ என்னும் அச்சம் இப்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது!
திரு கருனாநிதி அவர்களின் ஆவி இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறதா? அவரது மகனின் உடலிலும், பேரனின் உடலிலும் அது இருக்கிறதா? காணும் இடத்தையெல்லாம் கேட்கிறதா? வேலைபார்த்த பழைய இடத்தை துல்லியமாக கேட்டிருக்கிறதே என ஊர்மக்களெல்லாம் வியந்தவண்ணமாக உள்ளனர்!