தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நாளை ஒரு போட்டி தொடங்கவுள்ளது. ஒரு நாள் தொடரில் இடம் பிடித்திருந்த இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
தீபக் சாஹரின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இருந்தே விலகினார், இன்னும் அவர் மனதளவில் தயாராகவில்லை என்பதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரிலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஒரு நாள் போட்டியைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். இது இந்திய அணிக்கு சிக்கலாக எழுந்துள்ளது.
மற்ற இரண்டு கிரிக்கெடை விட டெஸ்ட் தொடர் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது என்பதால் இந்திய அணி இரண்டு போட்டிகளையும் வென்றாக வேண்டும்.