ரோகித் சர்மாவை அவமரியாதை செய்யும் வகையில் பதவி நீக்கம் செய்திருக்க கூடாது என்று ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று அனைவரையும் எதிர்ப்பார்க்க வைக்கும் கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல் என்றே சொல்லலாம்.
2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் மொத்தமாக 8 அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தது. 2022 ஆம் ஆண்டு எட்டிலிருந்து பத்து அணிகளாக ஐபிஎல் தொடர் மாறியது. இந்த 10 அணிகளில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளனர்.
இந்l நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் 6வது கோப்பையை சென்னை அணி வெல்லும் என்று தோனி ரசிகர்களாலும், மும்பை அணி வெல்லும் என்று ரோகித் ரசிகர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் ரோகித் ரசிகர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று மும்பை நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த ரோகித் சர்மாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையுடன் இருந்த ரோகித் சர்மாவை திடீரென அவமரியாதை செய்யும் வகையில் பதவி நீக்கம் செய்திருக்க கூடாது என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் இன்ஸ்ட்ராகிராமை 5 லட்சம் ரசிகர்கள் பின்தொடருவதை நிறுத்தியுள்ளனர். அதேபோல் எக்ஸ் பக்கத்தை 4 லட்சம் ரசிகர்கள் பின்தொடருவதை நிறுத்தியுள்ளனர்.
இதன் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரசிகர்கள் ரோஹித் சர்மாவின் சமூக வலைதள பக்கத்திற்கு சென்று ‘ கலைப்படாதீர்கள், உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.