இந்தியாவின் பழம்பெரும் நடிகையான ஜீனத் அமன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மிக விரைவாக 500K பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளார். மேலும் தனது ரசிகர்களுக்கும் இன்ஸ்டா பக்கத்திலேயே நன்றியைத் தெரிவித்த அவர் கூடவே ஒரு சில அறிவுரைகளையும் கூறியுள்ளார்.
இந்தியாவின் பழம்பெரும் நடிகையான ஜீனத் அமன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாக்ராமில் கணக்கைத் தொடங்கினார். அவர் கணக்கு தொடங்கி சிறிது காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
கணக்கு தொடங்கிய ஒரு சில மாதத்திலேயே 500,000 பின்தொடர்பவர்களைப் பெற்ற ஜீனத் அமன், பழம்பெரும் நடிகர்களில் குறுகிய காலத்திலேயே அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றவராகத் திகழ்கிறார்.
தன்னை பின்தொடரும் 500,000 ரசிகர்களுக்கும் தனது இன்ஸ்டா பக்கத்திலேயே நன்றியைத் தெரிவித்த அவர் கூடவே ஒரு சில அறிவுரைகளையும் கூறியுள்ளார்.
அதில், “இந்தப் பக்கத்தின் மூலம் லட்சக்கணக்கான, உங்களுடன் நான் தொடர்பு கொள்ள முடியும் என்பது மகிழ்ச்சியாகவும் ஒரு புதிய உற்சாகமான அனுபவமாக உள்ளது. இப்படி நன்மைகள் இருந்தாலும் சமூக ஊடகத்தில் தீமைகளும் உள்ளது. கடந்த மாதங்களில் நான் பல கசமான விஷயங்களை சமூக ஊடகத்தில் கவனித்தேன், எனவே உங்கள் அன்பிற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், நான் முதலில் சொல்கிறேன்.
சமூக ஊடகங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் தான் இந்த சமூக ஊடகம். இதனை உங்கள் மகிழ்ச்சிக்கும், ஊக்கத்திற்கும், நண்பர்களுடன் உரையாடவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களின் பாதுகாப்பை அழிக்கவோ, பொறாமையைத் தூண்டவோ, வஞ்சகத்தைப் புகுத்தவோ பயன்படுத்தாதீர்கள்.
இப்போது, எனது நன்றியை நான் வெளிப்படுத்தாமல் இருப்பது தவறு. எனது சமூகமும் அதன் வளர்ச்சியும் முற்றிலும் உண்மையானது மற்றும் இயற்கையானது. மேலும் நான் பெற்ற அன்பு அளப்பரியது. உங்களால் நான் பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.