கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுளளது. இருவர் உயிரிழந்தனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,324 ஆக அதிகரித்துள்ளது.
நாள்தோறும் 700 முதல் ஆயிரம் கோவிட் சோதனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கண்ணூர் மாவட்டம் பானூரில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கோவிட்-19 தொற்று காரணமாக 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பனூர் நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது.
கேரளாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவின் மாறுதலான ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது.