விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அரியானா அணி 30 ரன்களை வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்ற்றது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் அரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அரியானா அணியின் தொடக்க வீரர்க களமிறங்கிய அங்கித் குமார் 88 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் அசோக் 70 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அரியானா அணியின் மற்ற வீரர்கள் 30 ரங்களையும் எடுக்கவில்லை இருப்பினும் அரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களை இழந்து 287 ரன்களை எடுத்தது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சவுதிரி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அராபத் கான் 2 விக்கெட்களும், ராகுல் சஹர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் அபிஜித் தோமர் அட்டகாசமாக விளையாடி 106 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் குணால் சிங் ரத்தோர் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களை கூட எடுக்கவில்லை அதனால் 48வது ஓவர் முடிய ராஜஸ்தான் அணி 257 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
அரியானா அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் மற்றும் சுமித் கவுர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அனுஷால் மற்றும் ராகுல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனால் அரியானா அணி 30 ரன்களை வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. இப்போட்டியில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது அரியானா அணியின் ஸ்மித் குமாருக்கு வழங்கப்பட்டது.