நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்போன்கள் ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மக்களவையில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் குதித்து, புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகை குண்டுகளை வீசி கோஷங்களை எழுப்பினர்.
இதுதொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தானிலகுற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை எரிந்த நிலையில், போலீசார் மீட்டுள்ளனர்.
ராஜஸ்தான் தப்பி சென்ற லலித் ஜா, டெல்லி வருவதற்கு முன்பு 5 மொபைல் போன்களை எரித்து விட்டு விசாரணைக் குழுவை தவறாக வழிநடத்தியதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ராஜஸ்தானில் லலில் ஜா தங்கியிருந்த இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கு எரிந்த நிலையில் இருந்து செல்போன்களை மீட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் விசாரணை விவரங்கள் காவல்துறைக்கு வருவதைத் தடுக்க, அவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்து, ஜாவிடம் தங்கள் தொலைபேசிகளை ஒப்படைத்துள்ளனர்.
முன்னதாக, பார்லிமென்ட் பாதுகாப்பு மீறல் வழக்கில் ஆறாவது குற்றவாளியான மகேஷ் குமாவத்தை 7 நாள் காவலில் வைக்க பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்தது.