சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171வது திரைப்படத்தின் திரைக்கதை எழுதும் பணியில் இறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வளம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயங்கிய 5 படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்கப் போகிறார். ரஜினியின் 171வது திரைப்படம் குறித்து ரசிகர்கள் இப்போதே உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது ரஜினி படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.
அதற்காக அனைத்து விதமான சமூக வலைத்தள பக்கங்களிலிருந்து சிறிது காலம் தான் பிரேக் எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதனால் சில காலம் தன்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
மேலும், தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு அப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார். அதனால் அவரது 171வது படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.