மக்களவையில் தொலைத்தொடர்பு மசோதாவை (2023) மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
தொலைத் தொடர்புத் துறையை நிர்வகிக்கும் 138 ஆண்டுகள் பழமையான இந்தியத் தந்திச் சட்டத்தை மாற்றுவதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த மசோதாவுக்கு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனைத்தொடர்நது தொலைத்தொடர்பு மசோதா (2023) இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகம் செய்தார்.
* டிஜிட்டல் உள்ளடக்கிய வளர்ச்சியை வழங்கும் பாதுகாப்பான தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் கவனம் செலுத்தும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க தொலைத்தொடர்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* இந்த மசோதா பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்த தொலைத்தொடர்பு வரையறையின் கீழ் ஓவர்-தி-டாப் அல்லது இணைய அடிப்படையிலான அழைப்பு மற்றும் செய்தியிடல் பயன்பாடுகளை கொண்டு வர அனுமதிக்கிறது.
* , பொது அவசரநிலை ஏற்பட்டால், அத்தகைய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள் அல்லது அவற்றின் கூறுகளை கட்டுப்படுத்த, நிர்வகிக்க அல்லது இடைநிறுத்த இந்த சட்டம் மத்திய அரசை அனுமதிக்கும்.
* சந்தையில் போட்டி, டெலிகாம் நெட்வொர்க்குகளின் இருப்பு அல்லது தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில், நுகர்வோரின் நலன் கருதி, நுழைவுக் கட்டணம், உரிமக் கட்டணம், அபராதம் போன்றவற்றைத் தள்ளுபடி செய்யும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்கவும் இது வழி வகுக்கிறது.
* இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த மசோதா அனுமதிக்கிறது.
* ஒரு நிறுவனம் அதன் அனுமதியை ஒப்படைத்தால் உரிமம், பதிவு போன்றவற்றிற்கான கட்டணங்களைத் திரும்பப் பெறுதல் போன்ற சில விதிகளை எளிதாக்க இந்த மசோதா முயல்கிறது.
* இது தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு சிறந்த கட்டமைப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.